தன் உயிரை பணயம் வைத்து மூன்று மிருகங்களிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய சென்னை ஹீரோ

chennai heroசென்னையை சேர்ந்த வசந்த் பால் என்பவர், தன் உயிரை பணயம் வைத்து, ஒரு பெண்ணை குழு பாலியல் வன்புணர்விலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வசந்த பால், மாடல் மற்றும் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார், இவர் வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது சென்னை ஆலந்தூரில் உள்ள ஒரு ஒதுக்குப்புற பகுதியில், மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை பார்த்து வசந்த் பால், தன் உயிரை பணயம் வைத்து அப்பெண்ணை மீட்டுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வசந்த் பால் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், ”கடந்த வெள்ளிக்கிழமை இரவு கபாலி படம் பார்த்துவிட்டு, தி.நகரில் உள்ள நண்பர்களை சந்தித்து பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன்.

அப்போது, ஆலந்தூர் பாலம் அருகே செல்லும்போது புகை பிடிப்பதற்கு நின்றேன். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. பார்த்தால், போதையில் இருந்த ஒரு பெண்ணை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்கு சென்றேன். அப்போது அவர்கள் மூன்று பேரும் என்னுடைய கழுத்தை சணல் கயிற்றால் நெறுக்கினர்.

நானும், அந்தப் பெண்ணும் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற ஆட்டோக்காரர் ஒருவர் ஓடி வந்தார். உடனே அவர்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டனர்.

அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால் பொலிசில் புகார் அளிக்கவில்லை. இரவு ரோந்தில் பொலிசார் இருப்பார்கள் அவர்களிடம் இதுகுறித்து கூறலாம் என்று அங்கு தேடினேன். ஆனால், எங்கேயும் பொலிசார் இல்லை.

பொலிசில் முறையாக புகார் கொடுக்காவிட்டாலும், பொலிசாரிடம் இந்தத் தகவலைக் கூறலாம் என்று பார்த்தால் யாரும் இல்லை. சென்னை பாதுகாப்பற்ற நகரமாக சென்று கொண்டு இருக்கிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் தனியாக இருக்கிறோம் என கருதி ஒரு பிரச்சனையை தடுக்க பயப்பட வேண்டாம், நாம் நியாயத்திற்காக போராடும் போது, உலகம் சரியான நேரத்தில் நாம் உடன் இனனந்து விடும் என தெரிவித்துள்ளார்.

வசந்த் பாலின் கழுத்தை கயிற்றால் நெரித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: