தமிழக அரசுக்கு நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை!

seeman_26சமூக ஆர்வலர் பியூஸ் மனுசை தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்திரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட செயல் தமிழர்கள் அனைவரையும் அவமதித்ததிற்கு சமம் என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுசை கைது செய்ததே மிகப்பெரிய தவறு.

அவர் கைது செய்யும் அளவிற்கு குற்றம் ஏதும் செய்யவில்லை, அவரை கைது செய்தது மட்டும் அல்லாமல் சிறைக்கு உள்ளே வைத்து 30 காவலர்கள் தன்னை தாக்கியதாக பியூஷ் மனுஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வேதனையோட பேசி வடித்த கண்ணீர் ஒவ்வொரு மனதனுக்கும் பெருத்த அவமானம்.

சிறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது தொடர்பாக இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

காவலர்கள் ரவுடிகளா, சிறைபடுத்திய பிறகு அடிப்பதற்கான தேவை என்ன உள்ளது.

பியூஷ் மனுஷ் குற்றம்சாட்டிய பிறகு இந்த அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தியதா? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

உடனடியாக அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், இல்லை எனில் நாங்கள் சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: