காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ராஜ்நாத் சிங்

Kashmir-Mapகாஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் இப்போதைக்கு பேச்சுவார்த்தை கிடையாது என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

காஷ்மீரில் கடந்த 9ந் தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. காஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை 2–வது நாளாக ஸ்ரீநகரில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காஷ்மீர் வன்முறையில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறை கும்பலை கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்கும்படி காஷ்மீர் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் வன்முறையில் காயம் அடைந்தவர்களை சிறப்பு விமானங்கள் மூலமாக டெல்லிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவும் தயாராக இருக்கிறோம். வன்முறை, துப்பாக்கி குண்டுகளுக்கு பதிலாக மாற்றுவழிகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க உள்ளோம். அந்த குழு காஷ்மீரில் ஆய்வு நடத்தி 2 மாதங்களில் அறிக்கை அளிக்கும்.

காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்காக 3–வது நபரின் தலையீடு எங்களுக்கு தேவை இல்லை. பயங்கரவாத செயல்கள் கவலை அளிப்பதாக இருந்தாலும், இந்திய அரசு தீவிரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிய பின்னரே இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: