பாட்டெழுத வாய்ப்புத் தராததாலேயே தான் தயாரித்த ரஜினியின் கபாலியைப் பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் வைரமுத்து என்று கலைப்புலி தாணு பதிலடி கொடுத்துள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள கபாலி பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி மக்களின் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.
இந்தப் படம் குறித்து சாதகமான விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று அரிமா சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, கபாலி குறித்து கிண்டலடித்ததோடு, அந்தப் படத்தை தோல்விப் படம் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியில் அவர் பேசியது:
கபாலிக்கு முன்னாடி கோட் போட்டது நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களைப் பாரத்துதான் ரஜினிக்கு கோட் போட்டு ரஞ்சித் கபாலியை எடுத்துட்டாரு. நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும், இந்தக் கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை (இரு முறை)…. -இப்படிப் போகிறது அவரது பேச்சு. வைரமுத்துவின் வீடியோ பேச்சு சமூக வலைத் தளங்களில் வைரவலாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து வைரமுதத்துவைக் கண்டித்து பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக பல பத்திரிகையாளர்களே வைரமுத்துவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் வைரமுத்துவின் விமர்சனம் குறித்து கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த தாணு, வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது.
அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார். ஆனால் வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். விஜய்யை வைத்து சச்சின் படத்தை நான் எடுத்தபோது, அஜீத் படத்தில் எவனா இருந்தா எனக்கென்ன என்று பாட்டெழுதி, விஜய் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துவிட்டேன். எனவே சச்சினில் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். விஜய் ரசிகர்களை குளிர்விக்க விரும்புகிறேன் என்று கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்க முடியாத நிலை. அடுத்து துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்த போதும் கேட்டார். முடியவில்லை. கபாலியில் வாய்ப்புத் தர முடியாத சூழல்.
இதெல்லாம் புரியாமல் அவர் விஷம் கக்கி இருக்கிறார். கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை… யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா.. இன்று அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது, என்றார்.
கலைபுலி தாணு .. லிங்கா . கொச்சடையான் படங்கள் தோல்விக்கு விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் பணம் திருப்பி கேட்டு பிரச்சனை செய்த பொழுது நரித்தனமா உள்ள போய் ரஜினியின் கால்ஷீட்டுக்காக விநியோகஸ்தர்களுக்கு அப்பு வைத்தவன் தானே நீ ஞாயம் நீதி பேசுற ?
பொதுவாக வைரமுத்து பாடல் கேக்க சூப்பரா இருக்கும் ,,ஒன்னு மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ,,வைரமுத்து பக்கா தமிழன் ..அதான் உண்மை ,,,இவர் பாடல்கள் இல்லாமே காப்பி அடிக்க படவை ..ar rahman மூலமாக கோடி கட்டி பறந்தவர் ,,இவரை சில கவுண்டர்களுக்கு பிடிக்காது ,,இவரை ஒதுக்கி வைத்தார்கள் . தமிழனையும் தமிழ் மொழியையும் வைத்து போலாப்பு நடத்தும் ஒரு பக்கா தமிழன் .வாய்ப்பே இல்லாத காலத்தில் ar rahman கைகொடுத்தார் . இவர் ஒரு மருத்துவ மனை கட்டினார் பணம் இல்லாத காரணத்தால் ரஜினியிடம் உதவி நாடினார் .அதற்க்கு ரஜினியம் சம்மதம் தெரிவித்தார் ..,கால போக்கில் ,,ரஜினி சிபாரிசில் இவருக்கு ரஜினி படங்களில் பாடல் எழுத ரஜினியே சிபாரிசு செய்த்தார். பிறகு சொந்த மறுத்து மனை கட்டிட பணம் பணம் இல்லாததால் ரஜினியிடம் பண உதவி கேடடார் ,அதற்க்கு ரஜினியும் சம்மதித்தார் ,,அந்த மருத்துமனை எழுப்ப சில கொடிகள் ரஜினி உதவி செய்த்தார் ,,இது பத்திரிக்கையில் வராத செய்தி ,,,(ஆதாரம் என்னிடம் உள்ளது ) .தந் பாடலுக்கு தற்பெருமை அடித்துக்கொள்ளும் நண்டு வைர முதுக்கு பஞ்சமே இல்லை ,,,தமிழனுக்கு இது தேவையா ??,,தைரியமாக ஒன்று சொல்லுகிறேன் !வைரமுத்து நம்மவர் .!!? பொறாமை புடித்த ஒரு கவிஞர் ..அடுத்தவர் கவிதையை திருடி எழுதுபவர் ,, இவரின் அந்தரங்கங்கமும் என்னிடம் ஆதாரபூர்வமாக உள்ளது .
இதில் எவனும் யோக்கியன் கிடையாது ( நண்டு தமிழனை சொன்னேன் )
வைரமுத்துவின் வைர வரிகள்: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஜமானன்! கழுத்துவரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்! கவிஞருக்குக் கழுத்துக்கு மேலே!
மோகன் உங்கள் ஆதாரங்களை கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்.
பரவாயில்லை கலைப்புலி தாணு அவர்களே. வைரமுத்துக்கு இயக்குனர் ஷங்கர் ரோபோ 2.0 படத்திற்கு பாட்டெழுத வாய்ப்பு தருவார்.
வைரமுத்துவுக்கு ஆதரவாக திமுக பேச்சாளரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், கடவுளையே எதிர்த்த ஒரு மாநிலத்தில் கபாலியை எதிர்க்க முடியாது போலிருக்கிறது.
‘கபாலியின் தோல்வி’ என்று வைரமுத்து ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக அவரை இவ்வளவு தூரம் கட்டி வைத்து அடிப்பீர்களா? உடனே அவர் சாதிவெறியன் ஆகிவிடுவாரா? தினமணி வெளிப்படுத்தியது மிகப்பச்சையான சாதிய அரசியல். அதை எதிர்ப்பதை புரிந்துகொள்ள் முடிகிறது. ஆனால் வைரமுத்து அத்தகைய தொனியிலா பேசினார்?
விஸ்வரூபம் என்ற படம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் மூலம் தமிழர்ககள் அனைவரும் அந்தப் படத்தை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது கபாலி இவ்வளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் அதே போன்ற காரணம் இருக்கலாம்.
வைரமுத்து மீதான இந்தத்தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை. கபாலி ஒரு மசாலா படம். அதை மதம் ஆககாதீர்கள் என மனுஷ்யபுத்திரன் கூறினார்.