மண்ணின் மைந்தன் ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
கபாலி பீவர் இந்திய அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அனில் கோத், மண்ணின் மைந்தனான ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
ரஜினி அவர்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் உச்சபட்ச விருதான ‘மகாராஷ்டிரா பூஷன்’ வழங்கப்பட வேண்டும்.
மேலும் மத்திய அரசு ரஜினிகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மண்ணின் மைந்தனான ரஜினி, திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளார்.
ரஜினி கடவுளின் அவதாரத்துக்கு நிகராக அவரது ரசிகர்களால் மரியாதை அளிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறார்.
கபாலி திரைப்படம், உலகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கு அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதே இதற்கு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
– Maalai Malar
நல்லா சத்தம்போட்டு சொல்லுங்க ரஜினி மராட்டிக்காரன்னு.ஆனாலும் மானங்கெட்ட தமிழர்களுக்கு புத்தி வராது.
ரஜினி
மராட்டி காரனாக இருந்தால் என்ன !! !! “முத்து ” அண்ணாமலை “” படையப்பா “”பாபா “” லிங்கா “” இந்த படங்கள் எல்லாம் மராட்டி படங்களா ? அல்லது தமிழ் படங்களா ? தமிழ் வசனங்கள் தானே இந்த படங்களில் பேச படுகிறது !! இதில் தமிழன் எங்கே புத்தி இழந்தான் !! ஜப்பான் காரன் பார்க்கிறான் “” முத்து “” படத்தை !! என்னை
வாழ வைத்தது தமிழ் பால் !! என்று தமிழனுக்கும் தமிழுக்கும் விசுவாசமாக தானே இருக்கிறார் ! தமிழன் தமிழ் நாட்டில் இருந்து மலாயா விற்கு வந்து ,மலாய் மொழியில் பேசி இந்த நாட்டில் பிழைக்கலாம் ! மராட்டிய
இந்தியன் தமிழில் பேசி தமிழ் நாட்டில் பிழைக்க கூடாதா !! தமிழன் தானும் படுக்க மாட்டான் ! தள்ளியும் படுக்க மாட்டான் !!
புத்தி இருந்தா ஏன் கூத்தாடியை கொண்டாடப் போறாங்க.
இவரு தலைவர்னா, அப்பே அப்துல் காலம் ஐயா என்ன சொல்றது?
அன்பர்களே! அனாவசியமாக ரஜினியை திட்டாதீர்கள். நான் ரஜினியின் ரசிகன் அல்ல. நாம் புரிந்துணர்வோடு நடக்க வேண்டும். தமிழ் நாட்டு தமிழ் மடையர்களும் இங்குள்ள சிலரும் புத்தி கெட்ட தனமாக செயல் பட்டால் யாருடைய தவறு? ரஜினி ஒரு நடிகன் அது ரஜினியின் தொழில். அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. படையப்பாவில் பாடிய பாட்டை நானும் நம்பினேன் ஆனால் அது வெறும் கண்கட்டு வித்தை– எனவே ரஜினியின் படங்களை தொலைக்காட்சியிலும் பார்ப்பதில்லை. இது என் சொந்த நிலை. என்னை பொறுத்த மட்டில் யார் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழர்களாக வாழ்ந்தால் அவரை தமிழராக ஏற்று கொள்ள முடியும் அத்துடன் அது வே நியாயம். ஆனால் தமிழின் பேரிலும் தமிழர்களின் பேரிலும் சொந்தம் கொண்டாடி காலை வாரி விடும் எவனையும் விடக்கூடாது.
இந்த நீதிமன்றம் பல விசித்தரமான வழக்குகளை சந்தித்தது உண்டு என பல சினிமாக்களில் நாம் பார்த்ததுண்டு. அதேப்போல் ஒரு விசித்திரமான மனு ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி 66 வயதான அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதே அந்த மனு.
சென்னை வடபழனி நேதாஜி தெருவை சேர்ந்த கந்தசாமி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.
அதில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி, போலியான உந்துதலை ஏற்படுத்தி, படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினார்கள். இதனால் சென்னை அசோக் நகரில் உள்ள காசி தியேட்டருக்கு சென்று ரூ.1200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்.
எதிர்பார்ப்பிற்கு மாறாக சரியான மொக்கை படமாக எடுத்து இயக்குனர் ரஞ்சித்தும், ரஜினியும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். மேலும்ம், 66 வயது சீனியர் சிட்டிசனான ரஜினியை சண்டைக்காட்சிகளில் நடிக்க வைத்து தயாரிப்பாளரும், இயக்குனரும் சித்ரவதை செய்துள்ளனர்.
சீனியர் சிட்டிசன்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை அளித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து ரஜினியைக் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் சேர்த்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
ஹா ஹா -என்ன அறிவாளி.?
இந்த தமிழ் நாட்டு மடையர்களுக்கு என்ன சொல்லியும் புரியவில்லை. இவர்களே அதிக விலை கொடுத்து படம் பார்த்து விட்டு பிறகு மற்றவரை குறை சொல்வது இவர்களின் வாடிக்கையாக போய் விட்டது.அதிக முட்டாள்களை கொண்ட இடம் தமிழ்நாடாக இருக்குமோ?
சபாஷ் நாயுடு : என்ன ரஜினி நீதிமன்றத்தில் மனுவா ?
கபாலி : கிடக்கிறாங்க மங்களகரமான மஞ்சள் மாங்காய்ங்க. அந்த ஆண்டவனே வந்தாலும் இவங்களை திருத்த முடியாது
நண்பர் ராஜ நாகம் அவர்களே நீங்கள் எழுதிய பதிவு வேறு இடத்தில் இருந்து எடுத்து எழுதிய பதிவு .. இதில் தப்பு இல்லை . அதற்கு நீங்க ஒரு நன்றியாவது சொல்லி இருக்கலாம் . தமிழர் பண்பாடு அது தானே ?