ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழப்பு: 36 பேர் காயம்

odishaநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடியா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவின் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்ராக் – 8, பலாசோர் 7, குர்தா 6, ஜெய்பூர் 3, நயகரா 2, கேந்த்ரபாரா, சம்பல் பூர், கோயின்ஹார் மற்றும் மயூர் பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: