தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர்.
எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.
தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார்.
படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ்.
குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு கைது செய்ய வைத்திருக்கிறது.
கலைச்செல்வியின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது.
சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு.
கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க.
தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க என வேதனைப்பட்டனர்.
கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, ” என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் எனக் கதறி அழுதார்.
எவிடென்ஸ் கதிர் கூறியதாவது,
என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி.
ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது.
அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் சித்திரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடூரமாகக் கொலை செய்த ஆதிக்க சாதி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
சாலிய மங்கலத்தில் ஆதிக்க சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.
ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம்.
அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறோம்.
அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்’ என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்றார் கொந்தளிப்போடு.
தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும் என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
– Vikatan
தொட்டால் தீட்டு ஆனால் ………
தமிழ் நாட்டில் ஒருவர் இறந்தால் தமிழன் தமிழச்சி என்று சொல்ல வேண்டியது தானே? அல்லது இவர் இறந்துவிட்டார் என்று பேரை சொல்லவேண்டியது தானே ? ஏன் தலித் ? சரி என்றால் மற்றவர்களையும் சாதி பேரை சொல்லி அழைக்கலாமே?
கேவலத்தின் உச்சக்கட்டத்தில் இந்தியா நாட்டினர்.
டேய் டேய் டேய் இது ஒரு நாடா
தமிழர் திருநாளில் “தமிழர்கள் கோழை, நாம் தமிழர்களுக்கு பெருமையில்லை” சுயசித்தாந்தமானது என கண்டனம் தெரிவித்த
தமிழர் தேசியம் இறுதியில் உலகமே திரும்பி பார்க்கும் காலம் வந்து விட்டது என்ற தமிழர்நாட்டின் நாம் தமிழர் எதிர்ப்பார்ப்புக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது ? என்று கேள்வி கேட்டவர்கள்
தமிழ் நாட்டிலுள்ள நாம் தமிழர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது ? என்று கேட்பார்களா அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும்தான் ஓட்டுக்காக தலித்துகளை “நாம் தமிழர்” என்போம் மற்ற நேரத்தில் அவர்கள் “தலித்துக்கள்தான்” என்பார்களா ?
தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை சரி தலித் தலைவர்களான கிருஷ்ணசாமி, திருமாவளான போன்றவர்கள் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருந்தால் அரசு நிர்வாகத்தினர் இந்நேரம் நடவடிக்கை எடுத்திருக்க வாய்ப்பு உண்டு. ஒருவேளை தலைவர்கள் உயர்ந்த தலித்தாகவும் இறந்த பெண் தாழ்ந்த தலித்தாகவும் இருப்பார்களோ ?
ஹ்ம் எப்பதான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் பொறக்குமோ….கேடு கெட்ட கொள்கையும் பழக்கமும்
ஏன் தலித் என்று கூறவேண்டும்? அப்போ சுவாதி யார்? அவர் ஒரு பிராமண பெண் என்பதால் பரவில்லை. என்னடா சட்டம் இது? திருமாளவன் போன்ற நன்னெறி நா..கள் இருக்கும் வரை இது போன்ற செயல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும். இறப்பிலும் சாதி பார்க்கோம் கேவலமான இனம் நம் தமிழ் இனம் மட்டுமே.
இதே தமிழ் நாட்டில் சுவாதி என்ற பிராமின் பெண் காலை ரயில்வே ஸ்டேசனில் ஒருவன் அருவா கொண்டு அவளை வெட்டி கொன்றான் .. காரணம் ஒரு தலை காதல் , தமிழ் நாடே அரசாங்கத்தையும் போலீசையும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். போலிஸ் சந்தேகதின் பேரில் ராம் குமார் என்பவனை கைது செய்தார்கள் . பிறகு தான் தெரிந்தது குற்றவாளி ஒரு தலித் ( உங்க மொழியில்) விடுவார்களா தலித் தலைவர்களான கிருஷ்ணசாமி, திருமாவளான போன்றவர்கள் , ராம் குமார் குற்றவாளி இல்லை, அவன் அப்பாவி என்று போர்க்கொடி தூக்கினார்கள்.. இன்றும் சுவாதி இஸ்லாமுக்கு மதம் மாறி விட்டாள். அவளுக்கு நிறைய காதலன் உண்டு என்று தினம் தினம் கொன்று கொண்டு இருக்காங்க … கலைச் செல்வி இறப்பை நியாயப் படுத்தத் முடியாது .. சுவாதியின் மரணத்தை ? இருவருமே பெண்கள் ஆனால் வேற சாதிகள். ஸ்ரீகர முதல்வனே இப்போது தமிழ் நாட்டிலுள்ள நாம் தமிழர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்க சொல்லாம் இல்லையா ?
கடமை ..கண்ணியம்..கட்டுப்பாடு ….தந்த விளைவுகள் இது ….இந்த நிகழ்ச்சிகள் தினமும் நடப்பது …அனால் பத்திரிகையில் வெளிவருவது சில
கீழ் சாதி என்றவார்த்தை …கூடாது அனால் தலித் என்ற வடக்கு வார்த்தை நல்லது ….
என்னைப்பொறுத்தமட்டில் தலித் என்ற வார்த்தையே தவறு. அவர்கள் யாவரும் தமிழர்கள். அங்குள்ள எவனையும் நம்ப முடியாது. கேடு கெட்ட ஈன ஜென்மங்கள். நம் எல்லாரும் வெட்கி தலை குனிய வேண்டும். வாக்கு வங்கிக்காக எதையும் செய்யும் ஈன ஜென்மங்கள். பேசுவதற்கே கூசுகிறது. உத்தர பிரதேசத்திலும் இதே நிலைதான் அரசியல்வாதிகள் அரசியல் விளையாட்டு விளையாடுகிறான்கள்- அறிவிலிகள்.
இது பத்திரிக்கை எழுத்தாளரின் அநாகரிகம் அன்றி வேறு ஏதுமில்லை. இதில் சாதி குலம் என்ற வார்த்தைகள் இன்றி இளம் பெண் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் இந்த பத்திரிக்கை விஷமிகள் இது போன்ற ஜாதிவார்த்தைகளை பயன் படுத்தி இந்த விஷயத்தை பிரசுரிக்கிறார்கள்.
ஒரு பிராமணப் பெண்ணை கொன்றவனைக் கைது செய்ததும் உடனே அந்த போலீஸ் அதிகாரியைக் கைபேசியில் கூப்பிட்டுப் பாராட்டினார் ஜெயலிலதா! இந்தப் பிரச்சினையில் அதிகமாக பிராமணப் பத்திரிக்கைகளும் அலட்டிக் கொள்ளாது, ஜெயலலிதாவும் அலட்டிக் கொள்ள மாட்டார்! சும்மா ஐந்தோ, பத்தோ கொடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தாரே கொன்று போட்டதாக செய்தி கொண்டு வந்து விடுவார்! அம்மா என்றால் சும்மாவா? ஆமாம்! கிருஷ்ணசாமியிடமா அல்லது திருமாவளவனிடமா பதவியைக் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்? இவர்கள் அதிகம் பேசினால் இவர்களையும் சேர்த்து உள்ளே தள்ளிவிடுவார்கள்! பிராமண ஆட்சியில் இந்தியாவில் எதுவும் நடக்கும்!
சாதிகள் வேராயிருந்தாலும் பாதிக்க பட்டது தமிழர்கள்தானே. அவர்களுடைய சாதி தலைவர்கள் குரல் கொடுக்கிறார்களோ இல்லையோ, “நாம் தமிழர்” தமிழ்நாட்டையே மாற்ற போகிறோம் என்று கொக்கரித்த கட்சியல்லவா முதலில் குரல் எழுப்பியிருக்க வேண்டும். இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கமுன்வரவில்லை என்றால் “நாம் தமிழர்” கூறுவதில் அர்த்தமில்லையே.
ஆபிரகாம், திருமளவனிடம் பதவியை கொடுத்து தமிழ் நாட்டை பாக்கிஸ்தான் போன்று உருவாக்குவதற்க??
கிறிஸ்டியன் ஆட்சிணா இந்தியாவில் தேனும் பாலும் ஓடும் ஆக்கும், அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் படும் பாடு உலகத்துக்கே தெரியுமே ..
நாம் தமிழர்” கூறுவதில் அர்த்தமில்லையே.. இதுக்கு abraham terah கூறிய வார்த்தை பொருத்தமா இருக்குமா ?(கிருஷ்ணசாமியிடமா அல்லது திருமாவளவனிடமா பதவியைக் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்? ) நாம் தமிழருக்கா பதவியைக் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்?
நாட்டை ஆளுவதற்கும் சமயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பா! நாட்டை ஆளுவதற்கு நாட்டுப் பற்றும் இனப்பற்றும் இருந்தால் போதும்! காமராசரும், பக்வத்சலமும் என்ன கிறிஸ்டியன்களா? தேனும் பாலும் ஓடத்தானே செய்தது!
மனிதாபிமானத்தைச் சொல்லிக் கொடுப்பது தமிழர் சமயம். அதனை விளங்காமல் சாதியம் பேசி வாழ்வதால் வீழ்கிறது தமிழர் இனம். நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மனிதாபிமானத்தைச் சொல்லிக் கொடுப்பது இல்லை. அதனால் நாட்டை ஆள்வோருக்கு நல்லதொரு சமய அடித்தளம் தேவை.
தமிழ் நாட்டில் தினசரி நடக்கும் அநியாயங்களை அக்கிரமங்களை சொல்லி மாளாது. ஒரு முதலமைச்சர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அடித்து துன்புறுத்தி வெளியில் அமைதியான அம்மாவாக காட்சி அளிப்பது வெட்கக்கேடு. தொலைக்காட்சியில் பார்க்கும் அநியாயங்களுக்கு அளவே இல்லை போலும்–
நாட்டை ஆள திறமை பகுத்தறியும் திறமை உண்மையான நேர்மை வருங்கால முன்னேற்றத்தையும் எந்த பாகுபாடுஇல்லாமலும் வழி நடத்த வேண்டும்.
பதவி இருந்தால்தான் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்போம் இல்லையேல் வேடிக்கை பார்ப்போம் ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டும் சாதி பேதமில்லாமல் “நாம் தமிழர்” கட்சிக்கே ஒட்டு போடுங்கள் என்று குரல் கொடுப்போம். நல்ல கொளகை.
சாலியமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையினர் சாதி இந்துக்கள். அதனால் கிருஷ்ணசாமி, திருமாவளவன், சீமான் என்ன எந்த கட்சியானாலும் அடக்கித்தான் வாசிப்பார்கள். இல்லையேல் சாதி இந்துக்கள் அடக்கி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள் என்ற பயம்.
ஸ்ரீஹர முதல்வன் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். அங்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் போது நீதி நியாயம் சமூக நீதி அங்கு கிடையாதென்றே தெரிகிறது– நாடுகள் எல்லாம் முன்னேறிக்கொண்டிருக்கும் போது அங்கு நடக்கும் சமூக அக்கிரமங்கள் மன்னிக்கமுடியாதவை.ஏன் இவ்வளவு வக்கிரங்கள்? தமிழ் திரைப்படங்களில் பாருங்கள்– கடைசிவரை அவனை கொன்னேனா இல்லையா என்று ஆட்டம்போடுவது – பெரிய மானஸ்தன் போல் நடப்பது–பகல் வேஷம் போடுவது –சகிக்க வில்லை