மணிப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூர் மாவட்டத்தில், ரூ.100 லஞ்சம் கொடுக்காத இரண்டு கூலித் தொழிலாளிகளை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூலித் தொழில் செய்து வரும் பீர்பால் கூறுகையில், நாங்கள் 5 பேர் அங்கு கூலி வேலை செய்து வந்தோம். எங்களிடம் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்கள் லஞ்சம் கேட்டனர்.
லஞ்சம் கொடுக்காத எங்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்தனர் என்று கூறியுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வெர்மா தெரிவித்துள்ளார்.
-http://www.dinamani.com