ஈஷா யோகா மையம்: 2 பெண்களின் கருத்தைக் கேட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் உள்ள 2 பெண்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று கருத்தைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள லதா – கீதா என்ற 2 பெண்களின் தாயார் சத்யஜோதியின் ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவில், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஈஷா யோகா மையத்துக்குச் சென்று சகோதரிகளின் கருத்தைக் கேட்டு நாளை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார்.

மேலும், நீதிபதியுடன் 2 பெண்களின் பெற்றோரும் வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசாரணயின்போது நீதிபதிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாகக் கூறினால், எங்களால் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: