10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அரசு: ஒற்றுமையால் அரசையே மூக்கு மேல் விரல் வைக்க வைத்த கிராம மக்கள்!

saalaiதமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றாக இணைந்து சொந்த செலவில் சாலை அமைத்து, 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளை மூக்கு மேல் விரல் வைக்க வைத்துள்ளனர்.

ஆலங்குடியை அடுத்த குப்பகுடி ஊராட்சியில் பூமாங்கொல்லை, மொட்டாத்திக் கொல்லை, கருங்காளிகொல்லை, புல்லான்தோப்பு, பொட்டாத்திக்கொல்லை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு சாலை அமைத்து அசத்தியுள்ளனர்.

இது குறித்து பூமாங்கொல்லை கிராமத்தினர் கூறியது: இங்குள்ள கிராமங்களில் சுமார் 1200 பேர் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்துக்கும், பிரதான சாலைக்கும் இடையே இணைப்பு சாலை இல்லாததால் மிகுந்த அவதிப்பட்டு வந்தோம்.

சாலை வசதி கோரி 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து நாங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரி விதித்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்துள்ளோம். ஆண்டுக்கணக்கில் அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறாததால், நாங்களே இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: