ரியோவில் நான் இறந்திருக்கக் கூடும்: வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெய்ஷா இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெயில் அதிகமாக அடிக்கும்போது நீண்ட தொலைவை கடக்கும் போது அதிகமான தண்ணீர் தேவையானது.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை.

போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

மேலும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள நான் விரும்பியது கிடையாது என்பதையும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பயிற்சியாளர் தன்னை நீண்ட தொலைவிலான மாரத்தான் போட்டியில் ஓட கட்டாயப்படுத்திவிட்டார் என்றும் ஜெய்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: