இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் கிடைக்கும் வசதியை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனையில் இறந்த தனது மனைவி உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சுமார் 10கி.மீ வரை துக்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று, பாலசூர் பகுதியில் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த Salamani Behera (80) என்ற மூதாட்டியை கொண்டு செல்ல வாகனம் இல்லாததால் மூங்கில் கொம்பில் கட்டித் தூக்கிச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இன்று டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தி அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் கிடைக்கும் வசதியை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மேலும், அவர் கூறியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி இறந்தோரின் உடலை ஏற்றிச் செல்லுதல் மற்றும் கர்ப்பிணி பெண்களின் மருத்துவ சிகிச்சை ஆகிய இரு சேவைகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
இருப்பினும், தற்போது நடந்துள்ள இந்த சம்பவங்கள் கவலையை தந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்க தேவை ஏற்பட்டுள்ளதை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியும் ஆம்புலன்ஸ் தேடி அலையும் அனாதைகள் பிணம்!
“அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்க {தேவை} ஏற்பட்டுள்ளதை”.
இதற்கு முன் இத்தகைய தேவைகள் இருந்ததை அறியாத மந்திரி இருந்தால் என்ன இறந்தாலென்ன?