பேருந்தில் இறந்த மனைவி: கணவன், கைகுழந்தையுடன் கீழே இறக்கிவிட்ட நடத்துனர்

iindiaமத்தியபிரதேச மாநிலத்தில் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மற்றும் இறந்த மனைவியுடன் தவித்த நபரை வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பிறந்து 5 நாள் ஆன கைக்குழந்தை மற்றும் தாய் சனியா பாய் உடன் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறவே அவர் பேருந்தில் வைத்தே மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதையறிந்த அந்த பேருந்தின் நடத்துனர், அந்த குடும்பத்தினரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 கி.மீற்றர் பயணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராம்சிங் அந்த நடத்துனரிடம் கெஞ்சியும் அவர் அவர்களை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதால் செய்வதறியாது காட்டுபகுதியில் தவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு வழக்கறிஞர்கள் அந்த வழியாக சென்றவர்கள் இவர்களின் பரிதாப நிலையை பார்த்து உதவி செய்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களில் அவசர ஊர்தி இல்லாமல் உயிரிழந்த உறவினர்களை சுமந்தே செல்லும் அவல நிலை நடந்தேறும் நிலையில் ஆதரவற்ற குடும்பத்தினரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: