சென்னையில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன், தமிழகத்தில் திருட்டு டிவிடி அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று பேசினார். இவர்களை நினைக்க அருவருப்பாக உள்ளது. இவர்களுக்காகவா நாம் போராடினோம் என்று எல்லாம் பேசியதாக 2 எக்ஸ்ரா பிட்டிங்கை எமது தமிழ் இணையங்கள் சில வெளியிட. வழமைபோல ஈழத் தமிழர்கள், அவர்களுக்கு ஆதரவான சில பல ஊடகங்களை இதனை ஊதிப் பெரிசாக்க. சேரனும் ஒரு நழுவல் போக்கை கடைப்பிடித்து அப்படியே பெல்டி அடித்து மன்னிப்பு கேட்க்காத குறையாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நம்மில் எத்தனை பேர் “தமிழ் கண்” போன்ற திருட்டு வி.சி.டீக்களை வெளியிடும் இணையங்களில் போய் படம் பார்க்கவில்லை என்று கூறுங்கள் ? இந்தியாவில் சினிமா படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள். மற்றும் தனிப்பட்ட நபர்கள் படங்களை எடுப்பார்கள். இறுதியில் பணத் தட்டுப்பாடு வரும். அவ்வேளைகளில் மனைவியின் நகை, பூர்வீக சொத்துகள், ஏன் இருக்கும் வீட்டை கூட அடகு வைத்து. கந்து வட்டிக்கு பணத்தை எடுத்து படத்தை நிறைவுசெய்து வெளியிட. எங்கேயோ ஒரு அறையில் இருந்துகொண்டு ஒரு இணையம் அந்த படத்தை இணையத்தில் வெளியிடும். இதற்காக இவர்கள் பணத்தை கொடுத்து, தியேட்டர் உரிமையாளர்களை கையுக்குள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் அதி நவீன கமராக்களோடு உள்ளே நுளைந்து முழுப் படத்தையும் எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள். இதனை முழு மூச்சாகச் செய்வது இலங்கை தமிழர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை தான்.
இந்த விடையம் எம்மில் பலருக்கு தெரியும். தமிழ் கண், திருட்டு வி.சி.டி, தமிழ் ராக்கர்ஸ், எந்துசன்.காம், என்று வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இவை அனைத்துமே ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையம் தான் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. குறித்த இந்த இணையத்தளங்கள் மாதம் இதனூடாக கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கிறார்கள். அதுவும் அமேரிக்க டாலர்களில். இன்றைய தேதிக்கு திருட்டுத்தனமாக சினிமாப் படங்களை எடுத்து, அதனை இணையத்தில் வெளியிடும் இணையங்களுக்கு மக்கள் செல்வது அதிகம். சராசரியாக ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர்வரை செல்கிறார்கள். ஒரு நபர் இவர்களது இணையத்திற்கு சென்றால், 0.02 Cents முதல் 0.12 Cents வரை இவர்களுக்கு கூகுள் அட்- சென்ஸ் பணம் கொடுக்கிறது. அப்படி என்றால் சராசரியாக ஒரு நாளை இவர்களின் வருமானம் 1800 டாலர் முதல் 2000 டாலர் வரை இருக்கும்.
மாதம் முடிந்தால் கூகுள் அட் சென்ஸ் , றேவ் காண்டன், இல்லையென்றால் மீடியா பாட்னர் என்னும் நிறுவனங்கள் செக்கை அனுப்பி வைக்கும். இல்லையென்றால் உங்கள் வங்கிக்கே அந்தப் பணம் வந்து விடும். அதற்கு டாக்ஸ் கூட கட்டத்தேவையில்லை. ஏன் என்றால் அது உங்கள் பேர்சனல் வங்கிக்கே வரும். ஒரு நாளைக்கு$ 1500 டாலர்கள் சம்பாதித்தால் மாதம் $45,000 டாலர்கள். இதனை இந்திய ரூபாயால் பெருக்கினால் சுமார் 30 லட்சம் ரூபாவை இவர்கள் ஒரு மாதத்தில் மட்டும் உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கிறார்கள். இவர்களால் படம் நஷ்டமடைந்து தூக்குப் போட்டு உயிரை மாய்த்த , இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் ? ரத்தக் கறை படிந்த கைகளோடு இவர்கள் , ஒட்டு மொத்த சினிமாவையே சீரழிக்கிறார்கள். இந்த திருட்டு இணையங்கள் சீரழிப்பது ஒருவரை மட்டும் அல்ல. சினிமாவை நம்பியிருக்கும்(ஒரு படத்தை) 50 குடும்பங்களை தான்.
எப்படி தடுப்பது : தெரியாமல் திண்டாடும் தமிழகம்
வெளிநாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ஆங்கில திரைப்படங்களை இதுபோல களவாடி இணையத்தில் போட முடியாது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழ் நாட்டு உயர் நீதிமன்றத்தில் மிக இலகுவாக ஒரு வழக்கை தொடுத்து. உதாரணமாக தமிழ் கண் என்ற இணையம் திருட்டுப் படங்களை போடுகிறது என்றால் அதன் ஐ.எஸ்.பி(ISP) யை இந்தியாவில் முடக்க முடியும். ஒட்டு மொத்த இந்தியாவில் எவரும் குறித்த இணையத்தை பார்க்க முடியாது. எப்படி சில பாலியல் இணையங்களை இந்தியாவில் முடக்கினார்களோ. அது போல குறித்த இந்த இணையத்தையும் முடக்க முடியும். ஆனால் இதுவரை எவரும் இதனைச் செய்யவே இல்லை. இதனூடாக அவர்கள் வாசகர்களை இழப்பார்கள். இதனால் வருமானம் குறையும் . பின்னர் இதுபோன்ற திருட்டு இணையங்கள் நடத்துவதை அவர்கள் நிறுத்துவார்கள். இந்தியாவில் இதுபோன்ற இணையங்களை தடைசெய்தால். இந்திய நீதிமன்ற தீர்ப்பை உதாரணமாகக் காட்டி , மலேசியா , சிங்கப்பூர், இலங்கை மேலும் பல வெளிநாடுகளில் உள்ள பொலிசாரை தொடர்புகொண்டால் போதும். உடனே அன் நாடுகளிலும் இந்த நடை முறை செல்லுபடியாகும்.
எனவே இந்தியாவில் முதலில் யார் இதனை செய்யப்போகிறார்கள் என்பதே கேள்வி. அன் நபரே முதல் முதலாக திருட்டு வி.சி.டி மற்றும் சினிமாப் படங்களை தரவேற்றும் இணையங்களை முடக்கி பெரும் வெற்றிபெற்ற மனிதராகப் பேசப்படுவார் என்பதில் ஐயமில்லை எனலாம்.
-http://www.athirvu.com


























தமிழ் நாட்டில் திரைப்ப அரங்குகளில் திருட்டு வீடியோ பதிவு செய்வது …தமிழ் நாட்டு வீரர்கள் தான் …பாரின் என்றால் வாய்பிளக்கும் இவர்கள் பணத்திட்காக எதையும் செய்வார்கள் ..கள்ள DVD இப்போது பல இனத்தவர்கள் செய்கினறர்கள் ..மொழி முக்கியம் அல்ல பணம் முக்கியம் ..முதலில் copyright உள்ள தயாரிப்பாளர் அந்தந்த வெளி நாடுகளில் சடட நடவடிக்கை எடுக்கலாம் செய்வார்களா ?
எமது பார்வையில், மனித சமய, கலாசார, அரசியல் விழுமியங்களை பாதுகாக்கவேண்டுமாயின் ‘சினிமா’வை இல்லாதொழிக்க வேண்டும். அரசியல் மற்றும் வியாபாரங்களில் பெறப்படும் ‘கறுப்புப்பணம்’ வெள்ளையாக்கப்படுவதற்கும், கதைக்குத் தேவை என நடிகைகளை ஆபாசமாக காட்டுவதும், முத்தக்காட்சிகளை திணிப்பதற்கும் ‘சினிமா’ நன்றாகவே பயன்படுகிறது. ஒரு பெரிய குவளையில் உள்ள பாலில் சிறு துளி விசத்தை கலந்தபின்பு நம்மில் எத்தனை பேரால் அந்த பாலை அருந்தமுடியும்? பல ஆயிரம் வருடங்களாக மெருகேற்றப்பட்ட மனித விழுமியங்களை ஒரு நூற்றாண்டாக நஞ்சாக இருக்கும் சினிமாவை இல்லாதொழிக்க வேண்டாமா?