தமிழக விவசாயிகள் போராட்டம்: சரக்கு, பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது

farmers-protestசென்னை: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கர்நாடகத்தில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விவசாயிகள் சாலையில் மரங்களை வெட்டிபோட்டு மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருத்துறைப்பூண்டியில் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருந்தனர். ஓசூர் வழியாக இயக்கப்படும் கர்நாடக மாநில பேருந்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. மிகக்குறைந்த எண்ணிக்கையில் கர்நாடக மாநில பேருந்துகள் இயக்கப்படுவதால் ஓசூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக உதகமண்டலத்துக்கு வந்த கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் பேருந்து

tamil.oneindia.com

TAGS: