தர்மதுரை படம் திரையரங்கில் வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்திருந்தவர் திருநங்கை ஸ்நேகா.
இவர் 13 வயதில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்து சென்னையில் வேலை பார்த்தாராம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரின் விருப்பாம்.
ஆனால், யாரும் இவரை கம்பெனி உள்ளே கூட அனுமதிக்கவில்லை, இதை தொடர்ந்து எப்படியோ கஷ்டப்பட்டு பிரபல நடிகைகள் சிலருக்கு ஒப்பனை செய்பவராக வேலை பார்த்துள்ளார்.
அப்படியே தர்மதுரை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி ஒரு அண்ணனை போல் தான் என்னிடம் நடந்துக்கொண்டார்.
மிகவும் நல்ல மனுஷன் அவர், மேலும் 10 வருடமாக என்னை பார்க்க வராத குடும்பம் இந்த படத்திற்கு பிறகு என்னை பார்க்க வந்தார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
வாழ்த்துக்கள் சிநேகா ! 🙂