இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு… ஹிஸ்புல் பயங்கரவாதி சலாவுதின் மிரட்டல்

kashmir4568ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு செல்லும் நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு… எண்ணற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகளை ஊடுருவச் செய்திருக்கிறோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி சலாவுதீன் மிரட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி புர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 மாதம் ஆகியும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

ஹூரியத் எதிர்ப்பு

தற்போது ஜம்மு காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று செல்கிறது. இக்குழுவுக்கு ஹுரியத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சலாவுதீன் மிரட்டல்

அதே நேரத்தில் காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை அங்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சயத் சலாவுதின் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமைதித் தீர்வே இல்லையாம்

இது தொடர்பாக சலாவுதீன் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு என்பதற்கு இடமே கிடையாது. யுத்தத்தின் மூலம் தான் இதற்கு தீர்வு வரும். தற்கொலைப்படைகள் அமைத் தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவோம். இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: