ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார்.
தங்கம் வென்ற மாரியப்பன் 1.89 மீற்றர் உயரம் தாண்டியுள்ளார். 20 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய சார்பில் முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.
இதற்கு முன்னர் முரளிகந்த் நீச்சல் போட்டியில் 1972 ஆண்டு தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு தேவேந்திர ஜஜ்ஜாரியா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
-http://news.lankasri.com
தமிழன் என்பதால் ஓரவஞ்சனை காட்டும் மத்திய பாஜக அரசு.
பித்தளை பாத்திரத்துக்கு ஐந்து கோடி !
தமிழனுக்கு 75லட்சம்!
வாழ்த்துக்கள்.