தமிழக- கர்நாடகா எல்லையில் பதற்றம்: அத்திப்பள்ளியில் துணை ராணுவம் குவிப்பு- கலெக்டர் ஆய்வு

kar03கிருஷ்ணகிரி: கர்நாடக – தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்ததை முன்னிட்டு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய இடங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பஸ்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டது. தமிழக லாரிகளைத் தேடி தேடி கன்னட அமைப்பினர் நேற்று தீ வைத்து எரித்தனர். இதனால் கர்நாடகாவில் நேற்று சிக்கி கொண்ட தமிழக லாரிகளின் டிரைவர்களும், லாரி உரிமையாளர்களும் அச்சத்தில் உறைந்தனர். இந்த வன்முறைக்கு இடையே போலீசார் ஆங்காங்கே நின்று தமிழக வாகன ஓட்டிகளிடம் தமிழக பதிவெண் பிளேட்டை நீக்குமாறு கேட்டுக் கொண்டதால் பல வாகனங்கள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு 10 கம்பெனிகள் கொண்ட கலவர தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த துணை ராணுவ படையை கர்நாடக மாநிலத்துக்கு உடனடியாக நேற்று அனுப்பியது. ஒரு கம்பெனியில் 100 பேர் என ஆயிரம் பேர் கர்நாடகாவில் கலவரத்தை ஒடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் 5 முதல் 10 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் தயாராக இருப்பதாகவும், கர்நாடகா, தமிழக அரசு கேட்டுக்கொண்டால் அந்த படைகளை அனுப்ப தயாராக உள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வாகனங்களுக்கும், உடைமைக்கும், உயிருக்கும் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் நாங்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆர். ஹிதேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகங்களின் நம்பர் பிளேட் மீது பெயின்ட் அடித்து மறைத்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு கர்நாடக எல்லையைக் கடந்ததாக தமிழக லாரி டிரைவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே இன்றும் பதற்றம் நீடிக்கிறது. கர்நாடக – தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: