தன் ஊனத்தையும் பல கேலி கிண்டல்களையும் தாண்டி இன்று ஒருவர் பல்வேறு துறையில் சாதித்து கொண்டிருக்கிறார்.
இன்று பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு நாடங்களை இந்தியா முழுவதும் நடத்தி வரும் இந்த மனிதரின் சிறு வயது வாழ்க்கை பல சோகங்களையும், சவால்களையும் கொண்டதாக இருந்துள்ளது.
அதை பற்றி அவர் கூறியதாவது, நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன், என் பிறப்பு என் பெற்றோருக்கு சந்தோஷத்தை விட பெரும் அதிர்ச்சியையே தந்தது, ஏனெனில் நான் பிறக்கும் போதே வாய் பேச முடியாதவனாகவும், ஊனமுற்றவனாகவும், மனநிலை பிரச்சனை உள்ளவனாகவும் பிறந்தேன்.
என் தாய் என் மேல் அளவில்லாத அன்பையும் அக்கறையும் கொண்டிருந்தார், என் ஊனமான கால்களில் எண்ணெய் தேய்த்து பலமாக்க பல முயற்சிகள் செய்தார்.
அதன் பலனாக நான் நடக்க தொடங்கினேன், எனக்கு மெல்ல மெல்ல மூன்று வயதில் பேச்சும் வந்தது, பின்னர் என் பெற்றோர் என்னை பள்ளிக்கூட்த்துக்கு அனுப்பினார்கள்.
அங்கு நான் சந்தித்த அவமானம் கொஞ்சநஞ்சமில்லை. சக மாணவர்கள், நண்பர்கள் கிண்டலுக்கு அதிக அளவில் ஆளானேன்.
பின்னர் அது எனக்கு பழகி போனது, நான் காமெடியனாக இருப்பதாக பலர் சொன்னார்கள், அது எனக்கு கோபத்தை வரவழைக்கவில்லை, மாறாக என் நகைச்சுவை உணர்வை அதிகரித்து கொள்ளும் வேலையில் இறங்கினேன்.
பின்னர் பள்ளியில் நடந்த நாடகங்களில் என் திறமையை வெளிபடுத்தினேன். பின்னர் என் பெற்றோர் விருப்பத்துக்கு இணங்க இன்ஞினியரிங் படிப்பில் சேர்ந்தேன்.
ஆனாலும் நாடகங்கள் மீதே என் விருப்பம் இருந்தது. பின்னர் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு நாடகங்கள், நடிப்பு, தொலை தூர பயணங்கள் என என் வாழ்க்கை பாதையை மாற்றி கொண்டேன்.
தற்போது வரை இந்தியா முழுவதும் சுற்றி நம் கலாசாரம், பண்பாடு குறித்த 681 நாடகங்கள் நடத்தியுள்ளேன், என் வாழ் நாளுக்குள் பத்தாயிரம் நாடகங்கள் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார் இந்த தன்னம்பிக்கை மனிதர். !
-http://news.lankasri.com
ஏன் மற்றவர்களின் துன்பத்தை உணராத ஈனங்களாக பலர் செயல் படுகின்றனர்? உன்னால் உதவ முடியா விட்டாலும் தொல்லை தராமல் இருக்க முடியாதா? இதுதான் நம்முடைய கலாச்சாரமா? நினைத்து பார்த்தாலே எரிகிறது.