தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் 3ம் மாடியை அப்படியே காலி செய்து, தனி இடமாக மாற்றி அங்கே அம்மாவை மட்டுமே வைத்து சிகிச்சை செய்து வருகிறார்கள். செல்வி ஜெயலலிதாவுக்கு “இசட் பிளஸ்” ரக பாதுகாப்பு உண்டு. இது மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பாகும். அங்கே 3 அடுக்காக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநிலப் பொலிசார் மத்திய பொலிசார் மற்றும் இசட் பிரிவு பொலிசார் என்று யாரும் நுளைய முடியாத அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தோடு அங்கே பணி புரியும் அனைத்து தாதிகள், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் என்று அனைவரும் அங்கேயே தங்கியுள்ளார்கள். அவர்களது செல் போன் உரைடாடல் கூட ஒட்டுக்கேட்கப்படுகிறது.
இதேவேளை லண்டனில் உள்ள செயின் தாமஸ் மருத்துவமனையில் இருந்து, மருத்துவர் ரிச்சர்ட் பியெல்தான் சென்னை சென்று ஜெயலலிதாவை கவனித்து வருகிறார். அவர் சிலவேளைகளில் லண்டனில் உள்ள மருத்துவமனையோடு தொடர்புகொண்டு மேலதிக ஆலோசனைகளைப் பெற்று வருகிறார். முதலில் நுரையீரல் வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாகவும். இதனூடாக வைரஸ் தாக்கம் ரத்தத்தில் கலந்துள்ளது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் (பிரஷர்) சக்கரை வியாதி, கொலஸ்ரோல் மற்றும் தைராய்ட் குறைபாடு என்று பல நோய்கள் செல்வி ஜெயலலிதாவை தாக்கி இருந்தது. இதனூடாக ரத்தத்தில் சக்கரையில் அளவு அதிகரித்ததால், மருத்துவர்கள் கொடுத்த எந்த ஆன்டி பயோட்டிக் மருந்தும் வேலைசெய்யவில்லை. இதனால் அவர் நிலமை மோசமாகி உள்ளது. அவசர சேவைப் பிரிவில் அவருக்கு 24 மணி நேரமும் பல வகையான ஆன்டி பயோட்டிக் மருந்துகளை கொடுத்து வைரஸ் தாக்கத்தை குறைக்க முயற்ச்சி செய்து வருகிறார்கள்.
இருப்பினும் அவரது உடல் அதனை ஏற்க்கும் தறுவாயில் இல்லை என்பதே, மருத்துவமனை வட்டாரங்கள் ஊடாக அறியப்படும் செய்தி ஆகும். நாளுக்கு நாள் அவரது நிலை மோசமடைந்து வருகிறது. முன்னர்(அனுமதிக்கப்பட்ட 2 தினங்கள்) அவர் சசிகலாவோடு பேசி வந்தார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பேச முடியத நிலையில் ,கைகளை அசைத்தே அவர் சைகை பாஷையில் பேசுவதாக அறியப்படுகிறது. செப்சிஸ் அல்லது செப்டிசீமியா எனப்படும் பாக்டீரியா தொற்று ரத்தத்தில் கலப்பதால் அவருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை எதிர்த்துப் போராட கொடுக்கப்படும் , ஆன்டி பயோட்டிக் மருந்துகளை சேலைன் மூலமே ஏற்றி வருகிறார்கள். இது ஒருவரை மிகவும் பலமிழக்கச் செய்யும். அத்தோடு அன் நபரை களைப்புறச் செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும்.
இருப்பினும் தற்போது ஜெயலலிதாவை பழைய நிலைக்கு கொண்டுவர, ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மருத்துவர்கள் நம்புவது, லண்டன் மருத்துவரான ரிச்சர்ட் பியெல்தானை தான். அவர் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவை மற்றும் கோமாவில் இருக்கும் நபரை மீட்டுக் கொண்டுவரும் என்று பல நிபுனத்துவம் பெற்றவர் ஆவார். அவர் இன்னும் கையை விரிக்கவில்லை. நம்ம்பிக்கையோடு உள்ளார் என்கிறார்கள். ஆனால் அம்மாவின் நிலை மோசமடைந்து செல்கிறது என்பது பலராலும் ஒத்துக்கொள்ளப்படும் ஒரு விடையமாக இருக்கிறது. அவர் நலம்பெற்று மீண்டு வர கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தித்து வருகிறார்கள். இதில் அரசியல் பேதம் பாராமல் தமிழகத்தில் அண்ணன் மு.க ஸ்டாலின், கலைஞர், வைகோ தொடக்கம் பல அரசியல் தலைவர்கள் அம்மா மீண்டு வரவேண்டும் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இது ஆரோக்கியமான மற்றும் ஐக்கியமான அரசியல் பாதை ஒன்றை நோக்கி தமிழக தலைவர்கள் நவர்வதை முன்னுதாரணத்தோடு எடுத்துக் காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.
அதிர்வுக்காக,
கண்ணன்.
அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிலை முன்னேறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்கவேண்டும் என்கிறார்கள்.
-http://www.athirvu.com




























ஓவொரு மனிதருக்கும் நோய் வருவது இயறகை..அனால் இவரின் நிலையை தகர தமிழா நாட்டு சில்லறைகள் காமெடி ஆக்குவது ஒரு கேவலம் கெடட விடயம் ..ஆக கடமை ..கண்ணியம்..கட்டுப்பாடு இவைகளில் அழகு இதுதான் நினைத்திவன் எல்லாம் youtube இல் விமர்சனம் செய்கின்றார்கள் ..இவர்கள் அப்போலோ பக்கம் கூட சென்றது இல்லை …இவர் ஒரு நடிகையாக இருந்தவர் ..தனது உடல் நிலைபற்றி கவனம் வைத்து இருப்பர் …இந்த செய்தி உண்மையானால் …என் ஆரம்பகாலத்தில் இந்த தொற்று கன்டுபிடிப்படவில்லை என்பது சந்தேகம் ஆக உள்ளது …சரி இந்த நோயாளி உண்மையில் ஜெயா தானா ?
அரசியல் தலைவர் அறிக்கையையும் நம்பச் சொல்கின்றீர்! எதற்கும் தீக்குழித்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு வராமல் இருக்க வேண்டுவோம்.
இந்த படத்தில் கட்டிலில் படுத்து உள்ள பெண் உண்மையில் ஜெயா தானா ?
அரசியல்வாதிகளை பற்றி பேசும்போது எதனையும் அறுதியிட்டு உறுதியாக பேசமுடியவில்லை. மக்களிடம் அனுதாபம் தேடுவது இது ஒரு வழி. அவருடைய வழக்கு விசாரணை வெளியாகும் தருவாயில் உள்ளது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தான் நோய்வாய் பட்டால் தனது சக சட்டமன்றங்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எதுவும் நம்ப முடியவில்லை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்ட போது இவர் எப்படி நடந்து கொண்டார் என்பதும் யோசிக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். இனி செயல்பட முடியாது அதனால் அவரைப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் இவர். இதுவரை மருத்துவமனை அவரைப்பற்றி எந்த மோசமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. அப்படியே அவர் நோய்வாய்பட்டிருந்தால் சசிகலாவின் பிடியில் அவர் சிக்கியிருக்கிறாரா என்பதும் இன்னும் தெளிவில்லை! ஒரு முதலமைச்சருக்கு இந்த அளவுக்கு மர்மம் தேவையில்லை. நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம். எப்படியிருப்பினும் அவரின் உடல் நலனுக்காக நாம் பிரார்த்திப்போம்.