தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற இளைஞரே இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார்.
ஜவகர், பிளாஸ்டிக்கை ஒழிக்க தனி மனிதனாக சாலையில் அமர்ந்தும், டவரில் ஏறியும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இறுதியில் ஐவகர், தஞ்சாவூர் புதிய ஆற்றுப் பாலத்தின் மேல் தீக்குளித்து ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இறப்பதற்கு முன் ஜவகர் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.
127 கோடி மக்கள் நல்லா வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும், அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
தம்பி தற்கொலை பித்தன் அவர்களே, பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதனால் 40 கோடி மக்கள் இன்று 127 கோடி மக்களாக மாறி உள்ளீர்கள். அறிவியலில் உலகை மிஞ்சும் கண்டுபிடிப்புக்களை தராமல், வெறுமனே மனித உற்பத்தி இயந்திரமாக வாழ்ந்திருக்கிறீர்களே ? அதை கவனிக்க மறந்து விடீர்களே ? உங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பித்தர்களின் வேண்டுகோளை அரசாங்கம் நிறை வேட்ரி உள்ளதா ? அதுவும் இல்லை ! தற்கொலையினால் ஒன்றுமே நடக்காத பொழுது, எப்படி தற்கொலையில் தான் எல்லாம் துவங்குகிறது என்று நம்பினீர்கள் ? அடுத்த பிறவியிலாவது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிராமல், பிளாஸ்டிக்கை தேவை படும் பொழுது பயன்படுத்துங்கள். வறுமை எனும் கொடுமையை விட பிளாஸ்ட்டிக் ஒரு காளான் அல்ல.