திருமலை திருப்பதி தேவஸ்தான கஜானாவில் 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள் உள்ளது.
இதுகுறித்து, சனிக்கிழமை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் சிலர் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவற்றை, தேவஸ்தானம் தனியாகப் பிரித்து கஜானாவில் பத்திரப்படுத்தி வருகிறது. இந்த வகையில், தற்போது 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றை நாடுகள் வாரியாக தனித்தனியே பிரித்து வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றை, இந்திய ரூபாய் நோட்டுகளாக மாற்ற ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், அவை ரூபாயாக மாற்றப்படும் என்றார் அவர்.
-http://www.dinamani.com