நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடன இயக்கம், தயாரிப்பு என பிசியாக இருக்கிறார். பல வேலைகளுக்கு நடுவே தனியாக ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிறைய உதவிகள் செய்வதோடு தனது சேவை அமைப்பு மூலம் அவர்களை பராமரித்து வருகிறார்.
இந்த தீபாவளியில் அவருக்கு பிறந்த நாளும் கூட. பிறந்த நாள் கொண்டாட்டாட்டத்தை விரும்பாத அவர் தன் ஆஸ்ரமத்தில் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுகிறார்.
மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதமும் எனக்கு தேவை என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இன்று தான் வரும் வழியில் போலியோவால் பாதிக்கபட்ட ஒரு பெண் தயிரியமாக தேங்காய் வியாபாரம் செய்து உழைக்கும் அவரை பார்த்து பூரிப்பு அடைந்துள்ளார்.
-http://www.cineulagam.com