ஐதராபாத்:மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து, கணவர், 60 கி.மீ., தள்ளிச் சென்ற சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, ராமுலு, 53, கவிதா, 45. இருவரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.சிறிது காலம் ஐதராபாத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு, ஒரு அமெரிக்க நிறுவனம், பிச்சைக்காரர்களுக்கு, மாதந்தோறும், 5 கிலோ இலவச அரிசி அளித்து வருகிறது.
இதை அறிந்து, ரயில் மூலம், நேற்று காலை, ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர். எதிர்பாராத விதமாக கவிதா, ரயில்வே ஸ்டேஷனில் மரணமடைந்தார். சொந்த ஊருக்கு மனைவியின் உடலை கார் அல்லது ஆம்புலன்சில் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய, ராமுலுவிடம் பணம் இல்லை.
ஒரு பிச்சைக்காரரிடம் தள்ளு வண்டியை பெற்று, அதில், மனைவியின் உடலை வைத்து, 60 கி.மீ., துாரம் தள்ளிச் சென்றார். விகாரபாத் என்ற ஊருக்கு வந்தபோது, சிலர், ராமுலுவிற்கு பணம் அளித்து, கவிதாவின் உடலை, ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
-http://www.dinamalar.com
அந்த விகாரபாத் ஊரைச் சார்ந்த அந்த சிலருக்கு மிக்க நன்றி. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது மக்கள் ஒன்று கூடி இந்த ஏழைகளுக்கு உதவ முன் வரவேண்டும். அரசியல்வாதிகளிடம் மனிதம் எப்போதோ செத்துப்போய் விட்டது. சராசரி மனிதனிடம் அது எப்போதும் இருக்கும் என்பதை இது நிரூபிக்கிறது.
அன்பு vaalzga