இந்தியாவில் நள்ளிரவு முதல் இனி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள்

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள். தற்போது 500,2000 ரூபாய் நோட்டுக்களின் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.

மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், ” ஊழலுக்கு எதிராக நாம் எடுக்கும் முதல் போராட்டாம் இதுவாக இருக்கும். டிடி,செக்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது.” இதுபற்றி மேலும் கருத்துக்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை வங்கிகளில் இயங்காது என்பதால், நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வங்கிகளில் 500,1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற இயலாதவர்கள், மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டைகளை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

-http://www.tamilwin.com

TAGS: