புது 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ GPS சிப்?

noteஇந்தியாவில் புழங்கும் கறுப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ GPS சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை புழக்கத்தில் இருக்கும் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.

இதனிடையே புதிதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ GPS சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் மற்றும் பதுக்கல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டுமின்றி இந்த நானோ GPS சிப் பொருத்தப்பட்டுள்ளதால் செயற்கைக்கோள்கள் வாயிலாக கண்காணிக்க முடியும் எனவும், கறுப்பு பண நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வெளியான கருத்துக்கள் எனவும் குறித்த நானோ GPS சிப் ஒன்றை தயாரிக்கவே குறைந்தது ரூ.50 செலவாகும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்குமா என்பது சந்தேகமே எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

-http://news.lankasri.com

TAGS: