இனிமேல் விரல்களில் மை வைக்கப்படும்! மத்திய அரசு அதிரடி

001இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே மக்கள் பணத்தை மாற்ற திண்டாடி வருகின்றனர்.

போதிய பணம் இல்லாமல் ஏடிஎம்-களும் மூடி இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மத்திய அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதற்கு காரணம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வருவதால் தான்.

இந்த பிரச்னையை சமாளிக்க, தேர்தலில் பயன்படுத்துவது போன்று, வங்கியில் பணம் எடுக்க வருவோருக்கு கையில் அடையாள மை வைக்கப்படும். இன்று முதல் பெரு நகரங்களில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: