இந்தியாவில் 2 கோடி சட்டவிரோத வங்கதேசத்தினர்

001புதுடில்லி : இந்தியாவில் 2 கோடி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தினர் குறித்து ராஜ்யசபாவில் நேற்று எம்.பி., ஜர்னா தாஸ் பாய்டியா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதிலளித்தார்.

அதில், உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் பலர் இந்தியாவிற்குள் நுழைந்து வருவதாக அறிக்கை விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் ரகசியமாக இந்திய எல்லைக்குள் வந்து விடுகின்றனர்.

இதனால் இந்தியா முழுவதிலும் வசிக்கும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிபரத்தை பெறுவது சாத்தியமற்றது. நமக்கு கிடைத்துள்ள புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில் தற்போது 2 கோடி வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தாக்கல் செய்த அறிக்கையின்படி இந்தியாவில் 1.2 கோடி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2001 ம் ஆண்டு கணக்கீட்டின்படி இவர்கள் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: