பஞ்சாப் சிறை உடைப்பு.. தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் டெல்லியில் கைது

001டெல்லி: பஞ்சாப்பில் நேற்று நடந்த சிறை உடைப்பு சம்பவத்தில் தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹரிமிந்தர் மின்டூ டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றுகாலை போலீஸ் யூனிபார்மில் வந்த மர்ம நபர்கள் சிறை காவலர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி அங்கிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ உள்பட ஆறுபேரை மீட்டு சென்றனர்.

தப்பியோடிய ஆறுபேரையும் தேடி, கண்டுபிடித்து, கைது செய்ய மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறைக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. தலைமறைவாக இருக்கும் மேலும் ஐந்துபேரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: