ரூபாய் நோட்டுகள் விடயத்தில் ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி மாற்றம்

001இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

கடந்த 8-ம் திகதியன்று ரு.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு விதித்து வந்தது.

பணத்தை மாற்றும் எற்பாடு விடயத்தில் முதலில் 4000 மாற்றலாம் எனவும் பின்னர் 4500 வரை மாற்றலாம் என்றும் கூறப்பட்டது, இது மீண்டும் 2000 ரூபாயாக குறைக்கப்பட்டது

ஆக, மொத்தம் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்திலிருந்து ஒருவர் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க அனுமதி தரப்பட்டிருந்த்து

இப்போது இதில் புதிய மாற்றம் செய்யப்பட்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: