அதிமுகவை வசப்படுத்த பாஜக முயற்சியா? பரபரப்பு தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர்

BJP-logo_0அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வந்தது.

கடந்த 4-ம் திகதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சென்னை வந்து, இங்கேயே முகாமிட்டிருந்தனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்துக்கு காலை 7 மணிக்கே வந்த வெங்கய்ய நாயுடு, உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து அனைத்தையும் கவனித்து வந்துள்ளார். அவரது ஆலோசனையின்படியே ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இன்னும் 7 மாதங்களில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வுள்ளது. இத்தேர்தலில் 50 எம்.பி.க்கள், 136 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூலம் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது. இதற்காக சசிகலா உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளும் ஆயுதமாக பயன் படுத்தப்படலாம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்துவதுபோல ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார்.

சசிகலாவின் கணவர் நடராஜனை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மோடியிடம் அறிமுகப்படுத்தினார். அதை மோடி கவனிக்காதபோதும் தொடர்ந்து மூன்று, நான்கு முறை நடராஜனை அறிமுகப்படுத்த இல.கணேசன் முயற்சித்தார். அந்த முயற்சி, ஏதோ நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணி குறித்து வெங்கய்ய நாயுடு கூறியுள்ள கருத்துகள் குறித்த கட்சி தமிழகத்தில் ஆழக்காலூன்ற அதிமுகவின் உறவை எப்பாடு பட்டேனும் பெற முயற்சிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://news.lankasri.com

TAGS: