கர்நாடகா, கோவா ஏரியாவில் சிக்கிய கருப்பு பணம் ரூ.1000 கோடி.. ஐடி துறையின் அடேங்கப்பா ரெய்டுகள்

raid-345-14-1481715590பெங்களூர்: கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தில் வருமான வரித்துறை ரூ.1000 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை பிடித்துள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வருமான வரித்துறை தனது பிடியை இறுக்கியுள்ளது. டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூர் மற்றும் கோவா மண்டலத்தில் பல பண முதலைகள் வீடுகளில் ஐடி துறை ரெய்டு நடத்தியது.

இவ்விரு மண்டலங்களிலும் மொத்தம் 36 வழக்குகளில், ரூ.1000 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் பிடிபட்டுள்ளது. இதில் கணிசமான அளவுக்கு இருப்பது 2000 ரூபாய் நோட்டுக்களாகும். வங்கி அதிகாரிகள் உதவியோடுதான் இந்த ரூபாய் நோட்டு சிக்கியிருக்க வேண்டும் என்பது ஐடி துறை தகவல். ரெய்டுகளை தொடர்ந்து வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டு பிடி மேலும் இறுக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள், ஆவணங்களும் கணிசமாக பிடிபட்டுள்ளன. பெங்களூரின் யஷ்வந்தபூர் பகுதியில் உள்ள வீட்டில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.89 கோடி கிடைத்தது. அதில் ரூ.2.25 கோடி புதிய 2000 ரூபாய் தாள் ஆகும். முதிய பெண் ஒருவரை இந்த வீட்டின் காவலுக்கு நியமித்திருந்ததாகவும், அப்பெண் அதிகாரிகளை முடிந்த அளவுக்கு தடுக்கவே முயற்சி செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

tamil.oneindia.com

TAGS: