மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் மாற்றம் தாமதம்

high courtபுதுடில்லி : மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்டுகளின் பெயர்களை மாற்றம் செய்வதில், பல தடைகள் ஏற்பட்டுள்ளதால், பார்லிமென்டில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்களின் பெயர்களை, சென்னை, கோல்கட்டா, மும்பை ஐகோர்ட்களாக மாற்ற, ஜூலை, 19ல், லோக்சபாவில், சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மெட்ராஸ் ஐகோர்ட் பெயரை, சென்னை ஐகோர்ட் என்பதற்கு பதில், தமிழ்நாடு ஐகோர்ட் என, மாற்றம் செய்யும்படி, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மேற்கு வங்க அரசு, கல்கட்டா ஐகோர்ட்டை, கோல்கட்டா ஐகோர்ட் என மாற்றம் செய்ய விரும்பினாலும், அம்மாநில ஐகோர்ட், பெயர் மாற்றத்துக்கு இணங்கவில்லை.
இது தொடர்பாக, லோக்சபாவில், மத்திய சட்டத்துறை இணையமைச்சர், பி.பி.சவுத்ரி, எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:ஐகோர்ட்டுகளின் பெயர்களை மாற்றம் செய்வதற்காக, லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவுக்கு பதில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளிடம், மத்திய அரசு கருத்துக்களை கேட்டுள்ளது. புதிய மசோதா தாக்கலுக்கு, காலக்கெடு விதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: