கோலாலம்பூர்: இந்தியாவில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது, மோடி நல்ல சீர்திருத்தவாதி என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் என கூறினார்.
கருத்தரங்கு:
எகானமிக் டைம்ஸ்பத்திரிகை சார்பில் ஆசிய வர்த்தக தலைவர்கள் வீடியோ கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட மலேசியபிரதமர் நஜிப் ரசாக் இந்தியாவில் பிரதமர் மோடி கறுப்பு பணத்திற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை, ஒரு நல்ல சீர்திருத்தமாக உள்ளது கூறினார்.கடந்த ஆண்டு மலேசியாவிற்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இந்தியாவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் இதனை ஏற்ற ர் நஜிப் ரசாக் அடுத்தாண்டு இந்தியாவிற்கு வர உள்ளார்.மேலும் இருநாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-http://www.dinamalar.com
அன்று குஜராத் கலவரத்துக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு அப்போதைய மாநில முதல்வர் மோடிதான் காரணம் என்று ஆர்ப்பரித்தவர்கள் இன்று மோடி நல்ல சீர்திருத்தவாதி என சான்றிதழ் வழங்குவது, கோவிந்தசாமி அண்ணாமலை கூறுவதைபோல் “இதுதான் உலகமடா மனிதா ! இதுதான் உலகமடா”