மதுக்கடைகளை மூட மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

TASMACஇந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இயங்கி வருவதால் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இம்மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடுவதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்நடவடிக்கையை 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதியும் வழங்க கூடாது’ என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: