தமிழ்நாட்டின் தலைநகரை புரட்டி போட்ட வர்தா புயல் மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
ஆம், வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களில் ஒன்றுகூட நம் பாரம்பரியத்தை சேர்ந்தவை அல்ல என்பது தான் உண்மை.
நம்முடைய பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் என்றுமே தனிச்சிறப்பு உண்டு என்பதை நிரூபித்துச் சென்றுவிட்டது.
களத்தில் இறங்கி வேலை பார்த்தவர்களுக்கு ஒரே வியப்பு, அட நம்மூர் வேப்ப மரமும், அரச மரமும் சாயவே இல்லை, விழுந்து கிடந்தது எல்லாமே வெளிநாட்டு மரங்கள் தான்.
பெருங்கொன்றை, தைல மரம், இயல்வாகை, சவுக்கு, கருவேலம் போன்ற மரங்களும் அதிகளவு விழுந்து கிடந்துள்ளன.
இதிலிருந்து நாம் ஒன்றை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்…என்றுமே நமது பாரம்பரியமே தலைமுறைகள் கடந்து வாழும்.
வளர்ச்சிக்காக நாம் மற்ற நாட்டுகளின் கலாச்சாரத்திற்கு மாறினாலும் ஒருபோதும் அதற்கு அடிமையாகிவிட கூடாது.
இதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் பீட்சா, பர்கரின் வளர்ச்சி…ஏன் நாம் இட்லியை மறந்துவிட்டோம், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றாலே அவர் சொல்வது இட்லியை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்பது தான்.
பீட்சா, பர்கர் உட்பட துரித உணவுகள் ஆபத்தானது என தெரிந்தும் நாம் எதை விரும்பி உண்பது ஏன்? மேலைநாட்டவர்களால் அவர்களது உணவை நமது நாட்டில் கொண்டுவந்து பிரபலப்படுத்தும் போது நம்மால் ஏன் அது முடியவில்லை.
மற்றொரு முக்கிய விடயமாக பறவைகள் கூட நம்மூர் மரங்களில் தான் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றதாம், இதனால் வர்தா புயலால் எந்தவொரு பறவைக்கும் ஆபத்து ஏற்படுவதில்லை.
ஐந்தறிவு கொண்ட பறவைகளும் நமக்கு பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டன, இனியும் சிந்திக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட!!!! நமது பாரம்பரியத்தை நாம் தானே பிரதிபலிக்க வேண்டும்!!!!
-http://news.lankasri.com
1. அய்யா அவர்களே, நிச்சயமாக ஒவ்வொருத் தமிழனும் படிக்க வேண்டிய நல்ல சேதி. வேப்ப மரமும் அரச மரமும் சாயவில்லையா! நம்ப முடியவில்லையே! ஏன் அரச மரத்தை மறந்துவிட்டீர்களா? 2. அவசர உணவைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்; அவசர உணவுகள் நம்மை உடனே இன்பமான மேலோகத்திற்கு அனுப்பிவிடும்; ஆனால் பாரம்பரிய உணவுகளோ நம்மை இந்த உலகத்தில் நீண்ட நாட்களாக இங்கே இருக்கச் செய்யும். இந்த உலகம் எவ்வளவுத் துன்பமானதென்று தங்களுக்குத் தெரியாதா? 3. பறவைகளுக்கு இருக்கின்ற அறிவுக் கூட நம்மிடமில்லையே. அது தான் வருத்தமாக யிருக்கின்றது; நாம் வீடிழந்து நிற்கும் போது அந்தப் பறவைகளோ பாதுகாப்பான மரங்களில் வீடுகளைக் கட்டிக் கொண்டுள்ளது. அறிவுடையார் எல்லாம் உடையாரென்று வள்ளுவரே சொல்லிவிட்டார்; பாரம்பரித்தை அலட்சிய படுத்தினோம்; அதனால் வர்தாப் புயல் நாம் அறிவுக் குறைந்தவர்களென்று நம்மிடம் மெய்ப்பித்துக் காட்டிவிட்டது; 3. நாம் இன்னும் ஐந்தறிவுக் கொண்ட ஜீவராசிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாய்” – இப்படியொரு திருமுறை பாடல் வரி வருகின்றது. பாரம்பரியத்தின் அருமைத் தெரிந்த பறவைகளை பார்த்தாவது இனிமேல் நாம் சிந்திப்போமா? சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள் சிறந்து வாழ்வோம்;