கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த ராகேஷ் சுக்லா என்பவர் தெருநாய்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
சுமார் 735 தெருநாய்களை வளர்த்து வரும் ராகேஷ், இதற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகேஷ் சுக்லா கூறுகையில், டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்த நான் பெங்களூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறேன்.
லட்ச லட்சமாக சம்பாதித்தும் என்வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருந்தேன், பின் ஒருநாள் காவ்யா(நாய்) வந்தது.
அடுத்து லக்கி வந்தது, தொடர்ந்து தெருநாய்களை அழைத்து வந்த வளர்க்க ஆரம்பித்தேன், வீட்டில் இடம் இல்லாததால் பண்ணை வீடு கட்டினேன்.
நாய்களை கவனிப்பதற்காகவே மருத்துவர்கள் உட்பட 10 பேர் உள்ளனர், ஒருநாளைக்கு மட்டும் ரூ.45135 செலவாகிறது, இதில் 93 சதவீத பணம் நன்கொடையாக கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com
அருமை நண்பரே! தொடர்க உங்கள் சேவை!