குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
Mahesh Savani என்பவர் குஜராத்தில் வைர வியாபாரம் செய்து வருகிறார். தந்தையை இழந்த பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பிய இவர், அதன்படியே கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் 236 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து பெண்கள் இதில் அடங்குவர். இதுகுறித்து மகேஷ் கூறியதாவது, தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தொடர்ந்து இதுபோன்ற திருமணங்களை நடத்தி வைப்பேன் என கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com