சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு

farmer3சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

விவசாயிகளின் வியர்வை

நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி.

வேண்டும் ஒரு புரட்சி

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை.

பணத்தை சாப்பிட முடியாது

இயற்கையை அழிக்கிறோம்… ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வறண்டே கிடக்கிறது

கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

tamil.oneindia.com

TAGS: