நாகப்பட்டினம்: பயிர்கள் கருகியதால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பொழியாததாலும் வறட்சி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதனால் பயிர்கள் கருகி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்தவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, பயிர்கள் கருகியதைக் கண்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் வாங்கிய கடனுக்குக் கூட வட்டி கட்ட முடியாமல் கிடக்கிறது. எனவே, இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் கோரினார்கள்.
இதனைத் தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
-http://tamil.oneindia.com

























