உடல்நலக் குறைவால் விவசாயிகள் மரணம் என்பதா.. அமைச்சர் பேச்சால் உறவினர்கள் கொந்தளிப்பு

sampathபுதுக்கோட்டை: பயிர்கள் கருகிய துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத் பேசிய சர்ச்சைப் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

காவிரியில் இருந்து முறையாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழை தாமதமாக ஆரம்பித்ததோடு, போதிய அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு நீர் இல்லாமல் காய்ந்து வருவதைக் கண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வறட்சிக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சம்பத் விவசாயிகள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர் சம்பத்துக்கு விவசாயிகளை இழந்த குடும்பத்தினரும், இதர விவசாயிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், வறட்சி பாதிப்பால் விவசாயிகள் உயிரிழந்ததை அமைச்சர் சம்பத் கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: