தமிழன் ஏன் இதனைச் செய்தான்? புலிக்கொடி வீரர்களின் மர்மம்..!

Flag_of_Chola_Kingdomபுலிக்கொடியை சின்னமாகக் கொண்டு முழு உலகையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்தவர்களே சோழர்கள்.

இவர்களின் வீரம் வெள்ளையனையும் அடிமைப்பட வைத்தது, யாருக்கும் அடங்காத திமிருடன் தமிழர் பெருமையை புவி முழுதும் பறைசாற்ற வைத்தனர் அப்போதைய சோழர்கள்.

அவர்களின் வீரம், திறமை, வேகம் அனைத்துமே அவர்களது புலிக்கொடி கொடுத்த உற்சாகமே என்றும் கருத்து உண்டு. இத்தகைய கொடி உலகம் ழுமுதும் பறந்தன அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அவர்கள் மர்மங்களின் பிறப்பிடமாகவும் வாழ்ந்தனர்.

அதற்கு உதாரணமாய் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களைக் கடந்து இன்றும் சிறப்பின் சிகரமாய் வானுயர்ந்து நிற்கின்றது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டுவித்த இந்த ஆலயம் அப்போதைய தொழில் நுட்பத்தில் சுமார் 7ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இப்போது உள்ள தொழில் நுட்பத்திலும் கூட இது சாத்தியம் இல்லை. நவீன கால கோபுரங்களும் கூட சாய்ந்து போய் விட்டது. தமிழரின் கட்டிடக்கலையில் சிறப்பை எடுத்துக்காட்டும் அத்தோடு அற்புதமான கலைத்திறனை தெளிவாகக் காட்டுகின்றது இந்தக் கோயில்.

பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கோயில் கொண்டிருந்தாலும் மர்மங்களின் பிறப்பிடமாகவும் இந்தக் கோயில் இருந்து வருகின்றது என்பதற்கும் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது இந்த கோயில்.

சாத்தியமற்ற கட்டிடத்திறன், பிரம்மாண்டமாக சிற்பங்கள் அத்தோடு ஒரு பேனை மூடியை விட சிறிய சிற்பங்களும் கூட இலட்சக்கணக்கில் காணப்படுகின்றன. கோயிலுக்குள்ளே பல நூறு சுரங்கப்பாதைகளும் உண்டு.

மிகச் சிறிய துளைகளை கல்லில் இட்டுள்ளான் அப்போதைய சிற்பி, கல்லை உருக்கியே இதனை செய்ய முடியும் இல்லாவிடின் இது சாத்தியம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

அப்படி என்றால் கல்லை உருக்கும் தொழில் நுட்பத்தை அன்றைய தமிழன் எப்படி கற்றுக் கொண்டான் அந்த தொழில் நுட்பம் எல்லாம் இப்போது கை மாறிப் போனது எவ்வாறு?

மிக முக்கியமாக இந்து கலாச்சாரத்திற்கு முற்றிலும் ஒத்துவராத வகையில் ஓர் வெள்ளையனின் சிலையை கோயில் கோபுரத்தின் உச்சத்தில் அமைத்துள்ளார்கள்.

தமிழர் கோவிலில் ஏன் வெள்ளையன் சிலையை வைத்தான் தமிழன்? ஏன் இப்படி செய்தான் என்பதற்கு அடித்துக் கூறக் கூடிய சான்று எதுவும் இல்லை.

இப்போது தமிழர் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகம் எதிர்காலத்தில் வேறு இனத்தவர் வசம் சென்று விடும் என்பதை எடுத்துக் காட்ட இதனை அமைத்துள்ளான் அப்போதைய சோழன் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

அதேபோல் மர்மப் புன்னகை அரசி மோனலிசா ஓவியத்தை விடவும் சிறப்பான ஓர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிலை சிரிப்பு கோபம் சாந்தம் அனைத்தையும் காட்டக் கூடியது இந்த சிற்பத்திற்கும் மோனலிசா ஓவியத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

தமிழர் மட்டுமல்ல தமிழர் கலையும் அவன் செய்கைகளும் கூட மர்மமானவையே ஆனால் ஏன் செய்தான்? அத்தனை சிறப்பு திறமை இருந்தால் இப்போது அந்த திறன்கள் ஏன் இல்லாமல் போனது?

முன்னைய கால கோயில்கள் பலவற்றும் மர்மங்களே காணப்படுகின்றன அப்போதைய தமிழனுக்கு எப்படி இத்தகைய திறன் என்பதற்கு இன்று வரை விடையில்லை.

சோழக் கொடியான புலிக்கொடி பறந்த இந்த ஆலயம் இப்போது சுற்றுலாத் தலமாக மாறிப்போய் விட்டது இதற்கு காரணம் அப்போதைய மர்மத் தமிழர்களின் மௌனிப்பாக கூட இருக்கலாம்.

 

-http://www.tamilwin.com

TAGS: