சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்தியராஜ் மனித வதை குறித்து ஏன் பீட்டா அமைப்பு வாய்திறக்கவில்லை என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் பேசினார். அப்போது மிருகவதை பற்றி பேசுபவர்கள் மனித வதை பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை என அவர் பீட்டா அமைப்புக்கு கேள்வி எழுப்பினார். விவசாயிகள் உயிரிழப்பு மனித வதை என தெரியவில்லையா எனவும் சத்யராஜ் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சாதி, மதத்தால் பிரிந்து கிடக்கும் வரை நம்மை மிதிக்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.
1. சத்யராஜ் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை; நாம் சாதி மதத்தால் பிரிந்துக் கிடக்கின்றோம்; தமிழகத்தில் சரி, இங்கும் சரி, நம்மிடம் முதலில் தமிழர்களென்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அன்னைத் தமிழ் நம் தாய் மொழி; ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையில்லையேல் தாழ்வு. 2. அவர் சொன்னதுப் போன்று, மிருகவதைப் பற்றி பேசுகின்ற இந்திய அரசு, செத்து மடிகின்ற தமிழக விவசாயிகளை பற்றிக் கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை? 3 . மேலும், அன்று இலங்கையில், தமிழக மக்களின் தோப்புள் கோடி உறவான ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்றுக் குவித்தப் போது இதே மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்கவில்லை; நினைத்துப் பார்க்கவுமில்லை. ஏன்? எல்லாம் அவர்கள் போடும் பகல் வேஷம். அவர்கள் தமிழக மக்களை ஏளனமாக நடத்துகின்றார்கள். 4. இனிமேலாவது தமிழர்களாகிய நாம் மாறுவோம். தமிழர்களாக ஒன்றுப் படுவோம்!
தமிழர்களாக ஒன்றுபட சொற்கள் போதாது .செயல்வடிவம் வேண்டும் .அதன் முதற்படியாக நம் இனத்தவர் யாவரும் இறைவனை வழிபடும்போது ஒரே சொற்களை கூறி வழிபாட்டை முடிக்குமாறு ஆலோசனை கூறி வருகிறேன். அதன்வழி உணர்வால் ஒன்றுபடுவோம் ,அந்த சொற்கள் “”இறைவா சமுதாயம் உருப்பட வேண்டும் உயர வேண்டும்””என்பதாகும் . உறுப்படுத்தல் என்பதன் பொருள் அறியாமை வறுமை,குடி,திருட்டு,கொலை ஆகிய எதுவும் நம் இனத்தில் இருக்கக்கூடாது என்பதாகும்.இதை ஒவ்வொருவரு காலை உணவு அருந்துமுன் இறைவனிடம் ௫ முறை கூறவேண்டும் . இந்த சொற்கள் நாளடைவில் நம்மை ஒன்றுபடுத்தும்.
அட!இப்படியாவது தமிழன் சாதி,மதத்தை கடந்து ஒன்னு சேரட்டுமே…
ஒன்றுபடு தமிழா ,ஒன்றுபடு தமிழா ,நாம் வென்றெடுக்கும் காலமிது ,ஒன்றுபடு தமிழா ,ஒன்றுபடு தமிழா , நாம் வேறுபட்டு நிற்ப்பதினால் , நம் பாரம்பரியம் கூட கேள்வியின் வேள்வியாய்ப் போனதே தமிழா ,ஒன்றுபடு தமிழா,ஒன்றுபடு தமிழா ,நாம் வென்றெடுக்கும் காலமிது ,ஒன்றுபடு தமிழா ,ஒன்றுபடு தமிழா , ஒன்றுபடு ,ஒன்றுபடு, நாம் வென்றெடுக்கும் காலமிது ஒன்றுபடு .
தம்பி சத்யராஜ் போல ஆயிரமாயிரம் பேர் புத்தி சொல்லிக்கொண்டுதான் இருக்காங்க ? திராவிடத்தான் பல பாகமா
தமிழனை பங்கு போடறான் இவரும் அந்த மட்டைதான். நடிப்போடு
பட்ட கிளப்பினால் போதாது தமிழனா வேட்டை கிளப்ப வரணும்.
சிவகுமார் போல இதிகாசம் பேசி இன்னல் பண்ண வேண்டாம்,.தமிழர் தேசியம் வாங்க பிறகு அகரம் வாழும். தமிழ் நாடு இல்ல ! தமிழர் நாடு வெல்வோம். தமிழ் ஈழம் சுய ஆட்சி ஆகட்டும். அமரிக்க வல்லரசு பிரசிடெண்ட் டிரம்ப் போய் பார்ப்போம். நாங்க ரெடி நீங்க வாரீங்களா தமபி ? 12 கோடி தமிழனுக்கு மண்ணு வேண்டும். ஒரு மயிரை மீனும் காணோம்.
பொன். ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ஏன், மற்றவர்களை எதிர்பார்க்கிறிங்க? நீங்க டிரம்ப் பைப் பார்ப்பதற்கு என்ன தடை? இப்போதே மற்றவர்களின் வாலை பிடித்துக்கொண்டிருந்தால் தமிழர் தேசியம் அமைந்த பிறகு யார் வாலையாவது பிடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும்!