தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றிலிருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தால் பொலிஸ் அதிகாரிகள் பெண்கள், சிறுவர்கள் உட்பட இளைஞர்களை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
இதற்கிடையே சேலத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார்.
சென்னை மெரினாவிலும் அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் மக்கள் திரண்டு வருகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
சென்னை மெரினாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் அங்கு போராட்டம் நடத்தி வருபவர்கள் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் வருகையை கூட அனுமதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதியவர் தற்கொலை மிரட்டல்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரியும், பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக வெளியேற கோரியும் முதியவர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா அறிக்கை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அலங்காநல்லூருக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 21ம் திகதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மேலும் எங்கே எப்படி நடைபெறும் என்பது சஸ்பென்ஸ் என்றும், அலங்காநல்லூரில் காளைகள் சீறிப்பாய்வது மட்டும் உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com