அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, பாராளுமன்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஐக்கிய நாட்டுக்கான தூதராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கி ஹாலியை செனட் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநரான 45 வயது திருவாட்டி ஹேலி, 96 ஆதரவான வாக்குகளும் 4 எதிரான வாக்கு வித்தியாசத்தில் உறுதிசெய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளி குடியேறிகளின் மகளான ஹாலி, நி யூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாட்டுத் தலைமையகத்தில் தம் பணிகளைத் தொடங்கவுள்ளார்.
‘‘கவர்னர் நிக்கி ஹாலி தனது மாகாணம் மற்றும் நாட்டின் நன்மைக்காக, மக்களை அவர்களின் பின்னணி, கட்சியைப் பார்க்காமல் ஒன்றுபடுத்தி சாதித்துக்காட்டியவர்.
அவர் விவகாரங்களை கையாள்வதில் தனது ஆற்றலை நிரூபித்துக்காட்டியவர். உலக அரங்கில் அவர் அமெரிக்காவின் பிரதிநிதியாக, மாபெரும் தலைவராக விளங்குவார்’’ என அமரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.
-http://www.tamilwin.com
இந்தியர்களுக்கு உலக ரீதியில் கிடைத்த அங்கீகாரம் ,பெருமை ! சாதிக்க பிறந்த இனம் நாம் !! இன்னும் சாதனைகள் பல புரிஓம் நமது தாய் மண் இந்த மலையகத்திலும் .