தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது, மெரினாவில் போராடிய சில மாணவர்களுடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
முதல் கோரிக்கையாக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
அடுத்ததாக, போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சரியான மருத்துவ கவனிப்பு அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஜல்லிக்கட்டில் மாணவர்கள் போராடி பெற்ற வரலாற்று வெற்றியை அமைதியாக கொண்டாட அரசாங்கம் உதவ வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கோரியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது, ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டு வர முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
-http://news.lankasri.com