பட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க: வடிவேலுக்கு அறிவுறுத்தல்

vadivel_comedyபட்டும் திருத்தலேன்னா எப்படி,ஹீரோ ஆசையை விட்ருங்க என்று நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல் வந்துக்கொண்டு இருக்கிறதாம்.

வடிவேலு அரசியல் பக்கம் போய் படாதபாடு பட்டு சினிமாவை விட்டே சில காலம்

ஒதுங்கியிருந்தார்.தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு ஹீரோ ஆசை

வர இயக்குனர்கள் அவரை பார்த்து தெறித்து ஓடினார்கள். அதோடு, அவரின் நலன்

விரும்பிகள் அறிவுறுத்தலுக்குப் பின்னர்தான் காமெடியோடு நிறுத்திக் கொள்ள

முடிவு செய்துள்ளாராம் வடிவேலு.

இந்நிலையில் அஜீத் வடிவேலுவிடம் நாம் சேர்ந்து மீண்டும் படம் பண்ணலாம்
என்று கூறியுள்ளாராம். ஒரு மனிதன் கஷ்டப்படும்போது அஜீத் இந்த
வார்த்தைகளை கூறியதால் அதை கேட்டு வடிவேலு நெகிழ்ச்சியில்
கண்கலங்கினாராம். அது மட்டுமா, நன்றாக வசூலில் கலக்கிய மலையாள படத்தின்
தமிழ் ரீமேக் ஒன்றிலும் நடிகர் சத்யராஜுடன் கூட்டு சேர்ந்து நடிப்பில்
கலக்க ஒப்புதல் அளித்துள்ளாராம் வடிவேலு.இப்போதாவது வடிவேலுவுக்கு புத்தி
வந்ததே என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

-http://www.4tamilmedia.com