கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அடுத்த
மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (68). 3 ஏக்கரில் நெல்
பயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து 35 மூட்டைகளை விருத்தாசலம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடந்த 29ம் தேதி கொண்டு வந்திருந்தார்.
ஆனால், விற்பனை கூடத்தில் மூட்டைகளை வைக்க குடோன் வசதி இல்லை. இதனால், 3
நாட்களாகியும் நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை.
அப்போது, திடீரென பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து நாசமானது.
கணேசனும், மன உளைச்சலில் நெல்மூட்டைகளின் பக்கத்திலேயே படுத்திருந்தார்.
நேற்று அதிகாலை சக விவசாயிகள் மூட்டைகளை சரி செய்தபோது மூட்டை மீது
சாய்ந்தபடி விவசாயி கணேசன் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடகிழக்கு
பருவமழை பொய்த்து போனதால் நெற்பயிர்கள் கருகியது. பணத்துக்கு தண்ணீர்
வாங்கி பாசனம் செய்து வந்தார். 90 மூட்டை விளைய வேண்டிய வயலில் 35
மூட்டைகள்தான் விளைந்தது. இதனால் வாங்கிய கடனை 35 மூட்ைட நெல்லை விற்று
அடைக்கப்போவதாக கூறினார். ஆனால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால்
அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட செயலாளர்
கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை
கூடத்தில், போதுமான குடோன் வசதிகள் செய்து தரப்படவில்லை. விவசாயிகளுக்கு
இடமில்லாமல் திறந்தவெளியில் ரோடுகளிலும், உலர்களங்களிலும் வைத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் விளைபொருட்களை நனைந்து போகிறது. எனவே,
கூடுதலான குடோன்களை கட்டித்தரவேண்டும் என கூறினார்.
-http://www.4tamilmedia.com
கட்டித்தருவது இருக்கட்டும். இறந்தவருக்கு என்ன பதில்? அந்த அதிகாரிகள் இன்னும் உயிரோடு இருக்க வேண்டுமா?
மனித நேயம் இல்லாத இந்த மட பயல்கள் இருப்பதை விட கொல்வதே மேல்
.இவனுங்களுக்கு எல்லாம் இந்தியன் டாட்டா வந்தால் தான் திருந்து வானுங்கள்