நேதாஜியின் வாகன ஓட்டுநர் மறைந்தார்

nscb-driver

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய ராணுவத்தில் கர்னலாக இருந்தவருமான நிஜாமுதீன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 116.

ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தக்வா கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் வயோதிகப் பிரச்னை காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை காலை மறைந்தார். அவருக்கு மனைவி அஜ்புல் நிஷா, 3 மகன்கள், 2 மகள்கள் ஆகியோர் உள்ளனர்.

கடந்த 1901-ஆம் ஆண்டில் பிறந்த நிஜாமுதீன், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் 1943-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை கர்னலாக சேவையாற்றினார். நேதாஜியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

-http://www.dinamani.com

TAGS: